தமிழ்நாடு செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது

Published On 2025-06-09 08:48 IST   |   Update On 2025-06-09 08:48:00 IST
  • புதிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது.
  • நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து புதிய 6 மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி இம்மாதம் (ஜூன்) 19-ந்தேதி மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்கியது.

தி.மு.க. சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் கடந்த 6-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல, அ.தி.மு.க. சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, தனபால் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இன்றுடன் மனுதாக்கல் நிறைவடைகிறது. நாளை வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

வரும் 12-ந்தேதி மாலை வரை மனுக்களை திரும்பப் பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் போட்டியிருந்தால் வரும் 19-ந்தேதி தேர்தல் நடைபெறும்.

Tags:    

Similar News