தமிழ்நாடு செய்திகள்
4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்
- தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தமிழ்நாட்டில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.