கவனமாகத் தண்டவாளத்தைக் கடக்க வேண்டும்- மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கிய ரெயில்வே பாதுகாப்பு படை
- ஓடும் ரெயிலில் தொங்கிக் கொண்டு செல்ஃபி எடுப்பது குறித்த ஆபத்து பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
- தண்டவாளத்தில் கற்கள், மரக்கட்டைகளை வைத்தல் போன்ற விஷம செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.
சென்னை:
சென்னை திருவொற்றியூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட விவகாரத்தில், கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தண்டவாளத்தில் கற்களை வைத்தது 15 வயது சிறுவன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிறுவனை கைது செய்து சிறார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போ, சிறுவனுக்கு அறிவுரை வழங்கி பெற்றோரிடம் ஒப்படைத்த மாஜிஸ்ட்ரேட், பெற்றோர் குழந்தைகளை கவனிக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.
இந்த நிலையில், சென்னை கிண்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரெயில்வே பாதுகாப்புப் படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மின்சார ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்வது, ஓடும் ரெயிலில் தொங்கிக் கொண்டு செல்ஃபி எடுப்பது குறித்த ஆபத்து பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மேலும், தண்டவாளத்தில் கற்கள், மரக்கட்டைகளை வைத்தல் போன்ற விஷம செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. அதேபோல கவனமாகத் தண்டவாளத்தைக் கடக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.