தமிழ்நாடு செய்திகள்

பொங்கல் பரிசு- டோக்கன் விநியோகம் பணி தொடங்கியது

Published On 2026-01-04 14:00 IST   |   Update On 2026-01-04 14:00:00 IST
  • பொங்கல் பரிசை சுமூகமாக விநியோகிக்க டோக்கன் முறையில் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
  • டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்தில் சென்று பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம்.

பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு உடன் மூவாயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

பொங்கல் பரிசை சுமூகமாக விநியோகிக்க டோக்கன் முறையில் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.

சென்னையில் வீடு, வீடாக சென்று பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். டோக்கனில் பொங்கல் பரிசு தொகை பெறும் நேரம், தேதியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்தில் சென்று பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம். 

Tags:    

Similar News