தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க. கொடியை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்க கோரி டி.ஜி.பி.யிடம் ராமதாஸ் மனு

Published On 2025-07-24 08:27 IST   |   Update On 2025-07-24 08:27:00 IST
  • அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
  • அன்புமணி நாளை முதல் தமிழகம் முழுவதும் ‘உரிமை மீட்பு பயணம்’ மேற்கொள்ள உள்ளார்.

பா.ம.க.வில் தந்தை, மகனுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. குடும்பத்தார் மற்றும் நெருங்கியவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து, அன்புமணி தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்று கூறியிருந்தார். இதனிடையே, அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து அன்புமணி நாளை முதல் தமிழகம் முழுவதும் 'உரிமை மீட்பு பயணம்' மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை அன்புமணி பயன்படுத்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை பயன்படுத்துவதையும் நிர்வாகிகள் சந்திப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு எதிராக டி.ஜி.பி.யிடம் ராமதாஸ் மனு அளித்துள்ளார்.

மேலும் கட்சியின் நிறுவனர் அனுமதியின்றி நடக்கும் அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News