ரூ.13,430 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
- ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
- ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவுக்குச் சென்று தரிசித்தார்.
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று கர்னூல் வந்தார். அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர்.
அங்கிருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீசைலம் சென்றார். ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் சிறிது நேரம் தியானம் செய்தார்.
அதைத் தொடர்ந்து ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவுக்குச் சென்று தரிசித்தார்.
இதனைத் தொடர்ந்து நன்னூர் அருகே 'சூப்பர் ஜிஎஸ்டி- சூப்பர் சேமிப்பு' என்ற பொதுக் கூட்டம் நடந்தது. ஆந்திர மாநில கவர்னர் நசீர், முதல்வர் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண், லோகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ரூ.13,430 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். முடிவற்ற திட்ட பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
'சூப்பர் ஜி.எஸ்.டி சூப்பர் சேமிப்பு' என்ற கருப்பொருளில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 450 ஏக்கர் பரப்பளவில் நடந்த இந்த கூட்டத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.