இந்தியா

இந்தியா வந்த ரஷிய அதிபர் புதின்: நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி

Published On 2025-12-04 19:23 IST   |   Update On 2025-12-04 19:23:00 IST
  • ரஷிய அதிபர் புதின் 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்தியா வருகை தந்துள்ளார்.
  • பிரதமர் இல்லத்திற்குச் செல்லும் அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளிக்கிறார்.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை ரஷிய அதிபர் புதின் டெல்லி வந்தடைந்தார்.

தலைநகர் டெல்லி வந்தடைந்த அதிபர் புதினை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் இல்லத்திற்குச் செல்லும் அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட இரவு விருந்து அளிக்கிறார். பின்னர் புதின் ஓட்டலுக்கு சென்று தங்குகிறார்.

ஜனாதிபதி மாளிகையில் நாளை காலை அதிபர் புதினுக்கு முப்படைகளின் மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ஐதராபாத் இல்லத்தில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பிரதமர் மோடியுடன் கலந்துகொள்கிறார். மாநாட்டுக்கு இடையே மோடி-புதின் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கும் அவர்கள், கூட்டு அறிக்கை வெளியிடுகின்றனர்.

Tags:    

Similar News