தமிழ்நாடு செய்திகள்

பிரேமலதா சுற்றுப்பயணத்துக்கு அனுமதி கோரி மனு

Published On 2025-07-26 13:52 IST   |   Update On 2025-07-26 13:52:00 IST
  • தே.மு.தி.க. சார்பில் மாநில அளவிலான பிரசாரம் வருகிற 3-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது.
  • மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் படம் பொருந்திய திறந்த நிலை கேரவன் வாகனத்தை பயன்படுத்த உள்ளோம்.

தமிழக டி.ஜி.பி.யிடம் தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தே.மு.தி.க. சார்பில் மாநில அளவிலான பிரசாரம் வருகிற 3-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்காக மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் படம் பொருந்திய திறந்த நிலை கேரவன் வாகனத்தை பயன்படுத்த உள்ளோம். இந்த பிரசாரமானது போலீசாரின் வழிகாட்டுதல்களோடு மக்களிடையே அமைதி, ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும். இதற்காக கட்சி தரப்பில் இருந்து நிர்வாகிகளின் ஒத்துழைப்பு போலீசாருக்கு முழுமையாக வழங்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.

எனவே தே.மு.தி.க.வின் பிரசாரத்துக்கு அனுமதி வழங்கி, பிரசாரத்தின்போது பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News