தமிழ்நாடு செய்திகள்

பெரியாரை விமர்சித்த கர்நாடக இசைக் கலைஞர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை

Published On 2026-01-26 10:48 IST   |   Update On 2026-01-26 10:48:00 IST
  • பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது.
  • பெரியார் பிராமணர்களை இனப்படுகொலை செய்ய வேண்டுமென பொது வெளியில் உறக்க பேசியவர்

பிரபல கர்நாடக இசைக் கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி சகோதரிகளுக்கு பதம் ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா சமூக கருத்துக்களையும், மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்தி கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டதற்கு ரஞ்சனி, காயத்ரி சகோதரிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், "ஈ.வெ.ரா எனப்படும் பெரியாரை போற்றும் கருத்துக்களை டி.எம். கிருஷ்ணா முன்வைத்துள்ளார். பெரியாரை போற்றும் டி.எம். கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது.

பெரியார் பிராமணர்களை கூட்டாக இனப்படுகொலை செய்ய வேண்டுமென பொது வெளியில் உறக்க பேசியவர். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளை கொண்டு பேசியவர். ஆபாசமாக பேசுவதை சமூகத்தில் இயல்பான ஒரு விஷயம்தான் என்ற கருத்தைத் திணிக்க நினைத்தவர் பெரியார்" என்று உண்மைக்கு புறம்பான அவதூறு கருத்துக்களை தெரிவித்தனர்.

பெரியார் குறித்த ரஞ்சனி, காயத்ரியின் இந்த கருத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்தனர்.இது தொடர்பாக எழுத்தாளரும் திமுகவின் செய்தித் தொடர்பாளருமான சல்மா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கர்நாடக இசைப் பாடகர்கள் ரஞ்சனி, காயத்திரிக்கு எத்தனை ஆணவம். இது பெரியார் மண்" என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News