தமிழ்நாடு செய்திகள்

பிறந்த குழந்தையின் கட்டைவிரலை வெட்டிய செவிலியர் மீது வழக்குப்பதிவு

Published On 2025-06-01 07:17 IST   |   Update On 2025-06-01 07:17:00 IST
  • பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை செவிலியர் வெட்டியுள்ளார்
  • செவிலியர் நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இல்லாத பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நிவேதா என்ற பெண்ணிற்கு கடந்த 24-ஆம் தேதி வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

இதனை தொடர்ந்து நிவேதா, குழந்தையுடன் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், குழந்தையின் கையில் குளுக்கோஸ் மற்றும் மருந்து செலுத்துவதற்காக போடப்பட்டிருந்த ஊசியை செவிலியர்கள் மாற்ற முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பச்சிளம் குழந்தையின் கட்டை விரலை செவிலியர் அருணா தேவி வெட்டியுள்ளார்.

இதனையடுத்து குழந்தையின் கையில் பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்வதற்காக உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அனுப்பி வைத்தனர்.

குழந்தையின் விரலை துண்டித்த செவிலியர் நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இல்லாத பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், குழந்தையின் கட்டை விரலை தவறுதலாக வெட்டிய செவிலியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தையின் பாட்டி புஷ்பா அளித்த புகாரின் அடிப்படையில் விரலை வெட்டிய செவிலியர் அருணா தேவி மீது வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News