தமிழ்நாடு செய்திகள்
பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சரித்திர சாதனை வெற்றி- எடப்பாடி பழனிசாமி
- காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பதிலடியை பொதுமக்கள் கொடுத்துள்ளனர்.
- பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துகள்.
சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சரித்திர சாதனை வெற்றி பெற்றுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பதிலடியை பொதுமக்கள் கொடுத்துள்ளனர்.
பீகார் தேர்தல் வெற்றி பாஜக கூட்டணி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உறுதி செய்துள்ளது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துகள்.
பாஜக கூட்டணி பீகார் மாநிலத்தின் முன்னேற்றத்தையும், பொது நலனையும் துரிதப்படுத்தும் என நம்புகிறேன்.
பல்வேறு விமர்சனங்கள், எஸ்ஐஆர் முறைகேடுகள் என கூறப்பட்ட பொய்களையும் தாண்டி பீகாரில் சிரத்திர வெற்றிப் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.