தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்- அமித் ஷா

Published On 2026-01-04 19:33 IST   |   Update On 2026-01-04 19:33:00 IST
  • 2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும்.
  • இந்தியாவிலேயே அதிக ஊழல் நடந்துள்ளது தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் தான்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சார பயண நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.

பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் கோஷத்துடன் மத்திய அமைச்சர் அமித் ஷா உரையை தொடங்கினார். அப்போது, தமிழ்நாட்டில் மோடி தலைமையிலான அரசு அமைய வேண்டுமா? என கூட்டத்தினரிடம் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.

அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்கள் ஆமாம் என்று கோஷம் எழுப்பினர்.

பின்னர் அமித் ஷா மேலும் பேசியதாவது:-

தமிழ் மொழியில் உரையாற்ற முடியாததற்காக மன்னிப்பு கோருகிறேன். சோழ சாம்ராஜ்யம் ஆண்ட பூமியான புதுக்கோட்டையில் உரையாற்றுகிறேன்.

2026ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும். தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

இந்தியாவிலேயே அதிக ஊழல் நடந்துள்ளது தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் தான். உதயநிதியை முதலமைச்சராக்குவதே மு.க.ஸ்டாலினின் நோக்கம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது.

திமுக ஆட்சியை ஒழித்தே தீருவோம். தேர்தல் அறிக்கையில் மிகக்குறைவான வாக்குறுதிகளை நிறைவேற்றிய கட்சி திமுக தான்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும், அதற்கான நேரம் வந்துவிட்டது.

அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி கூட்டணி.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News