தமிழ்நாடு செய்திகள்

நயினார் நாகேந்திரன் பிரசார பயணம் தொடக்க விழா: கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

Published On 2025-10-12 19:50 IST   |   Update On 2025-10-12 19:50:00 IST
  • அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
  • அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக இயங்கி வருகின்றன. குறிப்பாக பெரும்பான்மையான அரசியல் கட்சித் தலைவர்கள் மக்கள் சந்திப்புகளை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு பாஜக சார்பில், அக்கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் 'தமிழகம் தலைநிமிர; தமிழனின் பயணம்' என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொள்கிறார்.

இதற்கான தொடக்க விழா இன்று மதுரை மாவட்டம், அண்ணாநகர் அம்பிகா திரையரங்கம் சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. இதில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோரும், கூட்டணி கட்சியான அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மேலும் ஜி.கே.வாசன், ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்தப் பிரசார பயணம் தொடக்க விழாவில், பாஜக பிரசார பாடல் வெளியிடப்பட்டது. அதில், பிரதமர் நரேந்திர மோடி திமுக மற்றும் காங்கிரஸை விமர்சிக்கும் பேச்சும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் பேச்சும் இடம் பெற்றிருந்தன.

Tags:    

Similar News