தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க. கட்சி பொறுப்பில் இருந்து முகுந்தன் ராஜினாமா

Published On 2025-05-29 12:41 IST   |   Update On 2025-05-29 13:48:00 IST
  • மருத்துவர் ராமதாஸ் எங்கள் குல தெய்வம்.
  • சொந்த காரணங்களுக்காக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.

திண்டிவனம்:

பா.ம.க.இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் திடீரென விலகினார்.

பா.ம.க.வின் இளைஞர் அணி தலைவராக கடந்த டிசம்பர் மாதம் டாக்டர் ராமதாசின் பேரன் முகுந்தன் நியமிக்கப்பட்டார்.

இதற்கு பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் பரபரப்பு உருவானது. ஆனாலும் முகுந்தன் இளைஞர் அணி தலைவராக நீடித்து வந்தார்.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

பேட்டியின்போது பா.ம.க. இளைஞரணி தலைவராக முகுந்தன் நீடிப்பார் என டாக்டர் ராமதாஸ் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் முகுந்தன் திடீரென பா.ம.க. இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் ஐயா வணக்கம். நீங்கள் தான் என் குல தெய்வம். சொந்த காரணங்களுக்காக பா.ம.க. இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.

இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து விலகினாலும் கட்சி பணியில் தொடர்ந்து செயல்படுவேன் என அதில் கூறி உள்ளார்.

டாக்டர் ராமதாஸ் பா.ம.க. இளைஞரணி தலைவராக முகுந்தன் நீடிப்பார் என அறிவித்த ஒரு மணி நேரத்தில் முகுந்தன் விலகி இருப்பது பா.ம.க. நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags:    

Similar News