தமிழ்நாடு செய்திகள்

ராமதாசுடன் முகுந்தன் சந்திப்பு

Published On 2025-06-08 11:46 IST   |   Update On 2025-06-08 12:09:00 IST
  • பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
  • சென்னை வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை:

பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை சமாதானம் செய்ய கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதனை தொடர்ந்து நேற்று தைலாபுரத்தில் இருந்து சென்னை வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் பா.ம.க. நிறுவனர் ராமதாசுடன் அவரது மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் சந்தித்து பேசியுள்ளார்.

பா.ம.க. வின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டு பின்னர் ராஜினாமா செய்த பிறகு தற்போது தான் முகுந்தன், ராமதாஸை முதன்முறையாக சந்தித்து பேசினார்.

முன்னதாக, நேற்று செய்தியாளர்களின் சந்திப்பின்போது முகுந்தன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, முகுந்தன் விவகாரம் முடிந்து போன விஷயம். இனி நடக்கப்போவதை குறித்து பேசுங்கள் என்று ராமதாஸ் கூறியிருந்தார். 

Tags:    

Similar News