தமிழ்நாடு செய்திகள்

மோன்தா புயல் எதிரொலி: தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Published On 2025-10-27 08:55 IST   |   Update On 2025-10-27 08:55:00 IST
  • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது.
  • சென்னைக்கு கிழக்கே வங்கக்கடலில் 600 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மோன்தா என பெயரிடப்பட்டுள்ளது.

மோன்தா புயல் நாளை மாலை அல்லது இரவில் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் மோன்தா புயல் புயல் உருவாகி உள்ள நிலையில் தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

சென்னைக்கு கிழக்கே வங்கக்கடலில் 600 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது.

Tags:    

Similar News