தமிழ்நாடு செய்திகள்

வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

செங்கோட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

Published On 2025-08-24 14:54 IST   |   Update On 2025-08-24 14:54:00 IST
  • சிகிச்சை பெற்று செல்வோர் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
  • வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விருது வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிந்துரை செய்தார்.

செங்கோட்டை:

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தென்காசி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

இன்று அதிகாலை குண்டாறு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர் செங்கோட்டை அருகே உள்ள வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென சென்று அங்கு ஆய்வு செய்தார்.

பின்னர் அங்குள்ள சிகிச்சை பெற்று செல்வோர் வருகை பதிவேடுகளில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறித்தும், அவர்களுக்கு எவ்வாறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

இதற்கிடையே ஆய்வுக்கு பின்னர் சிறந்த முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததற்காக வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விருது வழங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரிந்துரை செய்தார். 

Tags:    

Similar News