தமிழ்நாடு செய்திகள்

நீர் வளத்தை பெருக்க 1000 தடுப்பணைகள்- சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்

Published On 2024-12-10 12:05 IST   |   Update On 2024-12-10 12:05:00 IST
  • பல்வேறு உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் கால்வாய்களை தூர்வார மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள்.
  • தடுப்பணைகளை அதிகம் கட்டி தண்ணீரை சேமித்தால் வரும் காலங்களில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்பது உண்மை.

சென்னை:

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது காஞ்சிபுரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன் பேசும்போது பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. அதனை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என்றார்.

இது போன்று பல்வேறு உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் கால்வாய்களை தூர்வார மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

தடுப்பணைகளை அதிகம் கட்டி தண்ணீரை சேமித்தால் வரும் காலங்களில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்பது உண்மை. எனவே நிதி அமைச்சர் எனது துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சருடன் கலந்து பேசி 1000 தடுப்பணைகள் கட்டி மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே போல் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, தடுப்பணைகள் அதிகம் கட்டினால் 100 ஆண்டுகள் தண்ணீர் பிரச்சனை வராது என்றார்.

Tags:    

Similar News