தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. தலைவர் விஜய் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்..!

Published On 2025-09-13 19:57 IST   |   Update On 2025-09-13 19:57:00 IST
  • இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சிக்கு ஒன்னும் செய்யவில்லை.
  • காவிரி ஆறு இருந்தும் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. அதற்கு தீர்வு காணாமல் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய், 2026 தேர்தலுக்கான பிரசாரத்தை இன்று திருச்சியில் தொடங்கினார். 8 கி.மீ. தூரத்தை 4 மணி நேரமாக தொண்டர்கள் வெள்ளத்தில் கடந்து மரக்கடை பகுதிக்கு வந்தார். திருச்சி மரக்கடையில் பேசிய விஜய், இரண்டு அமைச்சர்கள் இருந்தும் ஒன்னும் செய்யவில்லை எனக் கூறினார். திருச்சியில் காவிரி ஆறு இருந்தும் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. அதற்கு தீர்வு காணாமல் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என் விமர்சனம் செய்திருந்தார். பெண்கள் பாதுகாப்பு, திமுக நிறைவேற்றாத வாக்குறுதி குறித்து பேசினார்.

திருச்சி என்றால் கே.என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர்தான் அமைச்சர்களாக உள்ளனர். இதனால் இவர்களைத்தான் அவர் விமர்சனம் செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் சென்றடைந்த அமைச்சர் அன்பின் மகேஷிடம், விஜய் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் திருச்சிக்கு ஒன்னும் செய்யவில்லை, அவரது பிரசாரத்திற்கு அதிகமான கூட்டம் வந்துள்ளதே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அன்பில் மகேஷ் "முழு விவரத்தையும் இன்னும் நான் பார்க்கவில்லை. இப்போதுதான் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்துள்ளேன். பார்த்தபின் அது சார்ந்து கருத்து சொல்கிறேன்.

கூட்டம் வந்திருப்பதாக சொன்னார்கள். முழுமையாக பார்த்திவிட்டு, அதன்பின் எனது கருத்தை தெரிவிக்கிறேன். விஜய் கூட்டத்திற்கு வந்துள்ளவர்களின் வீட்டில் உள்ள அண்ணன், தங்கை போன்றவர்களுக்கு தமிழக அரசின் நலத்திட்டம் சென்றடைந்துள்ளது. மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் காலை உணவு திட்டம் போன்றவற்றில் கலந்து கொண்டவர்களின் குடும்பத்தினர் பயன்பெறலாம்" என்றார்.

Tags:    

Similar News