தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு "வெள்ளி யானை" விருது வழங்கி கவுரவம்

Published On 2025-11-26 22:14 IST   |   Update On 2025-11-26 22:14:00 IST
  • சாரண இயக்கத்தின் இந்த உயரிய விருதினை, உ.பி. ஆளுநர் வழங்கிக் கெளரவித்தார்.
  • வலிமையான சமுதாயத்தைப் படைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்.

பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான வெள்ளி யானை விருது அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு வழங்கப்பட்டது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற #19thNationalJamboree நிகழ்வில் @bsgnhq இயக்கத்தின் மிக உயரிய அங்கீகாரமான வெள்ளி யானை விருதினைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். சாரண இயக்கத்தின் இந்த உயரிய விருதினை, உ.பி. ஆளுநர் அவர்கள் வழங்கிக் கெளரவித்தார்.

மிக உயரிய வெள்ளி யானை விருதினை மாணவர்களின் நலன் காக்கும் நம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்கால இந்தியாவின் நம்பிக்கைத் தூண்களான என் அன்பு மாணவச் செல்வங்கள் மற்றும் இளைஞர்களுக்கும் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.

அன்பு, மனிதநேயம் மற்றும் ஒழுக்கத்துடன் கூடிய வலிமையான சமுதாயத்தைப் படைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்.

அன்பும் நன்றியும்!

இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News