தமிழ்நாடு செய்திகள்

நட்பின் அடிப்படையிலேயே சந்திப்பு: திருமாவளவன் விளக்கம்..!

Published On 2025-06-18 19:27 IST   |   Update On 2025-06-18 19:27:00 IST
  • அவரும் அரசியல் பேசவில்லை. நானும் அரசியல் பேசவில்லை.
  • அவர் ஏன் அப்படி கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. அதற்கு அவர்தான் விளக்கம் சொல்ல வேண்டும்.

திருமாவளவனை சந்தித்தது தொடர்பாக கேட்ட கேள்விக்கு "திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துள்ளது. தற்போது இதை மட்டும்தான் தெரிவிக்க முடியும்" என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் பின்வருமாறு:-

நட்பின் அடிப்படையிலேயே சந்தித்தேன். வி.ஐ.டி. வேந்தர் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பங்கேற்றோம். அப்போதுதான் வைகைச் செல்வனுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. திருச்சியில் மதச்சார்பின்மை பேரணி நடத்தினோம். அதற்காக திருச்சி சென்று தனியார் விடுதியில் தங்கியிருந்தோம்.

நான் தங்கிய அறையின் அருகில் அவர் தங்கியிருந்தார். எனக்கு ஒரு புத்தகத்தை பரிசு அளித்தார். விடுதலை போரில் சீர்காழி என்ற புத்தகத்தை வழங்கினார். பலரின் முன்னிலையில் நடந்த சந்திப்பு. அரசியல் ஏதும் பேசாமல் நடந்த சந்திப்பு. அவர் இலக்கிய தளத்தில் என்ன செய்து வருகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த கொண்ட ஒரு தருணம். அவ்வளவுதான்.

அவரும் அரசியல் பேசவில்லை. நானும் அரசியல் பேசவில்லை. அவர் ஏன் அப்படி கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. அதற்கு அவர்தான் விளக்கம் சொல்ல வேண்டும். 2026-ல் ஆட்சியில் பங்கு என்ற கேள்விக்கான சூழ்நிலை எழவில்லை இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News