தமிழ்நாடு செய்திகள்
அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த மருது அழகுராஜ்- செய்தி தொடர்பு குழு துணைத்தலைவராக நியமனம்
- மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சேர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார்.
- அ.தி.மு.க.விலிருந்து விலகிய மருது அழகுராஜ் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். இவர் அ.தி.மு.க.வின் தீவிரப் பேச்சாளர் ஆவார்.
அ.தி.மு.க.வில் உட்கட்சி மோதல் ஏற்படவே எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இரு தரப்பினராகப் பிரிந்தனர். அப்போது மருது அழகுராஜ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சேர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் அவர் சமீப காலமாக அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க.விலிருந்து விலகிய மருது அழகுராஜ் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார்.
இந்த நிலையில் மருது அழகுராஜூக்கு தி.மு.க. செய்தித் தொடர்பாளர் துணைத் தலைவராக தி.மு.க. தலைமை நியமித்துள்ளது.