தமிழ்நாடு செய்திகள்

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் குமரி அனந்தன் உடல் தகனம்

Published On 2025-04-09 18:28 IST   |   Update On 2025-04-09 18:28:00 IST
  • அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் உயிரிழந்தார்.
  • டி.எஸ்.பி தலைமையில் 24 காவலர்கள் 7 குண்டுகள் முழங்க குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் டாக்டர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் உயிரிழந்தார்.

குமரி அனந்தனின் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், குமரி அனந்தனின் உடல் இறுதி சடங்கிற்காக ஊர்வலமாக வடபழனி மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பிறகு அங்கு, மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

டி.எஸ்.பி தலைமையில் 24 காவலர்கள் 7 குண்டுகள் முழங்க குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு வடபழனி மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News