தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. - கே.சி.வீரமணி

Published On 2025-08-08 14:53 IST   |   Update On 2025-08-08 14:53:00 IST
  • 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.
  • கட்சியின் எதிர்கால நலனுக்காகவே பிரேமலதா விஜயகாந்தை சந்தித்தேன்.

வருகிற 2026 சட்டசபை தேர்தலை கருத்தில்கொண்டு 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பேரில் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலா விஜயகாந்த் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

மாநிலங்களவை இடம் ஒதுக்குவதில் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. இடையே பிணக்கு ஏற்பட்டதால், தற்சமயத்திற்கு யாருடனும் கூட்டணி இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் திருப்பத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை சந்தித்து பேசினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே.சி.வீரமணி கூறியதாவது:

* தே.மு.தி.க. எங்கள் கூட்டணியில் தொடர்வதற்கு அ.தி.மு.க. தயாராக உள்ளது.

* கட்சியின் எதிர்கால நலனுக்காகவே பிரேமலதா விஜயகாந்தை சந்தித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News