தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லையா? - விளக்கம்

Published On 2025-09-30 17:00 IST   |   Update On 2025-09-30 17:00:00 IST
  • விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்
  • கூட்ட நெரிசலில் சிக்கியவர்களில் 11 பேர் அக்ஷயா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இதனிடையே கரூர் நெரிசலில் சிக்கியவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று இணையத்தில் தகவல் பரவியது.

இந்நிலையில், இந்த தகவல் வதந்தி என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து உண்மை சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கரூரில் தவெக பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகே அமைந்துள்ள அக்ஷயா மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்து செல்லவில்லை என்று சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.

கூட்ட நெரிசலில் சிக்கியவர்களில் 11 பேர் அக்ஷயா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆனால், அங்கு 6 ஐசியு படுக்கைகள் மட்டுமே இருந்துள்ளன. குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவர் பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவர்களும் அங்கு சென்றுள்ளனர். அக்ஷயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் நிவாரண நிதி காசோலை மூலம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News