தமிழ்நாடு செய்திகள்
கரூரில் 41 பேர் பலியான சம்பவம்: புதிய விசாரணை அதிகாரி நியமனம்
- காவல்துறை சார்பில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டு தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
- நீதிபதி அருணா ஜெகதீசன் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.
கரூர்:
கரூரில் தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் பாதிக்கப்பட்டவர்களிடம் இந்த 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.
காவல்துறை சார்பில் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமிக்கப்பட்டு தனியாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அவர் ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரபடுத்தினார். இந்த நிலையில் டிஎஸ்பி மாற்றம் செய்யப்பட்டு கரூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
அவர் இன்று சம்பவ இடமான வேலுச்சாமி புரத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார்.