தமிழ்நாடு செய்திகள்

தமிழ் போல் வாழ்க உன் புகழ்! - கனிமொழி புகழாரம்

Published On 2025-06-03 11:22 IST   |   Update On 2025-06-03 11:22:00 IST
  • அப்பா! ஆசான்! தலைவர்!‌ இதில் எந்த வார்த்தையை முதலில் சொல்லி அழைப்பது.
  • நீங்கள் ஏற்றிய திராவிடத் தீயே எப்போதும் நெஞ்சினில் கனன்று எரிகிறது.

மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த விழா இன்று சிறப்பாக நடத்தப்பட்டது.

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தி.மு.க. எம்.பி. கனிமொழி புகழாரம் சூட்டி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

அப்பா! ஆசான்! தலைவர்! இதில் எந்த வார்த்தையை முதலில் சொல்லி அழைப்பது. பணிவும், இரக்கமும், அன்பும், புரட்சியும், தமிழும், அறமும், மனிதமும், அரசியலும் உங்களிடம் இருந்தே கற்றுக் கொண்டோம். நீங்கள் ஏற்றிய திராவிடத் தீயே எப்போதும் நெஞ்சினில் கனன்று எரிகிறது. தமிழ் போல் வாழ்க உன் புகழ்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News