தமிழ்நாடு செய்திகள்

ஆஸ்கர் குழுவில் உலக நாயகன்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கமல்ஹாசன்

Published On 2025-06-28 09:53 IST   |   Update On 2025-06-28 09:53:00 IST
  • கமல்ஹாசனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
  • மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது.

சென்னை :

ஆஸ்கர் விருது குழுவில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்தார்.

அவரது வாழ்த்து செய்தியில், உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் - கலைஞானி கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்!

மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது! என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஆஸ்கர் அமைப்பின் அழைப்பு ஒரு மகிழ்வென்றால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்துச் சொற்கள் மேலும் மகிழ்வு. மிக்க நன்றி என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News