தமிழ்நாடு செய்திகள்

'என் மகள் மட்டும் தி.க.' என கலைஞர் கூறியது எனக்கு மிகப்பெரிய பெருமை- கனிமொழி

Published On 2025-04-26 16:36 IST   |   Update On 2025-04-26 16:36:00 IST
  • ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வழங்குபவர்தான் சுயமரியாதைக்காரர்.
  • தமிழ்நாட்டில் சாதி என்பது மெல்ல நுழைகிறது, அதைத் தவிர்க்க வேண்டும்.

கோவையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர்," தேர்தல் வெற்றி, கட்சி பொறுப்பு என எத்தனையோ பொறுப்புகள் எனக்கு கிடைத்தாலும், 'என் வீட்டில் அனைவரும் திமுக. என் மகள் மட்டும் திக' என கலைஞர் கூறியதை மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன்.

பெண்ணை இழிவாகப் பேசுபவர் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை வழங்குபவர்தான் சுயமரியாதைக்காரர்.

ஆண், பெண், நிறம், பொருளாதாரம் என பல்வேறு வகைகளில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. மதவாதிகள் சிலர், தாங்கள் உருவாக்கிய கட்டமைப்பை உடைக்கக் கூடாது என நினைக்கின்றனர். தவறான அரசியல் மூலம் தமிழ்நாட்டில் சாதி என்பது மெல்ல நுழைகிறது, அதைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News