மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்க தொடங்கி உள்ளதால், பொது மக்கள் இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை வரை அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வர வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரையை கடக்க தொடங்கி உள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் பலத்த காற்று வீசி வருகிறது.
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை 5.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டது. அடுத்த 3 மணி நேரத்திற்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடல் அருகே நிலவி வந்த ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் நெருங்கும் சூழலில், பலத்த காற்று வீசுவதால் மெரினாவில் உள்ள கலங்கரை விளக்கத்தின் மேல் இருக்கும் ரேடார் இயக்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சேதத்தை தடுக்க ரேடார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கலங்கரை விளக்க பராமரிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம்
▪️ மாலை 4 மணி நிலவரப்படி, ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 4,856 கன அடியாக அதிகரிப்பு
▪️ ஏரிப் பகுதியில் 14 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது
▪️ 24 அடி உயரம் கொண்ட ஏரியில் 19.31 அடிக்கு தற்போது நீர் உள்ளது
▪️ 3645 மில்லியன் கன அடி கொள்ளளவில், தற்போது 2436 கன அடி தண்ணீர் இருப்பு
சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வன விலங்கு மீட்பு தொடர்பான உதவிகளுக்கு பின்வரும் உதவி எண் 044-22200335 என்ற எண்ணில் சென்னை வன உயிரினக் கோட்ட தலைமையிட (வன உயிரினம்) சரகத்தினை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை தொடர்வதால், சென்னை விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், நாளை அதிகாலை 4 மணி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயலை எதிர்கொள்வதற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்னகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இதற்கு முன் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரும் வேகம் குறைந்துள்ளது.