என் மலர்
தமிழ்நாடு
மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
- ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக உருவாகி இன்று மதியம் மாமல்லபுரம்- காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் இன்று மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து 190 கி.மீ. தொலைவில் உள்ள ஃபெஞ்சல் புயல் இன்று கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Live Updates
- 1 Dec 2024 2:28 AM IST
ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்ட விமான சேவை 13 மணி நேரம் கழித்து மீண்டும் தொடங்கியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் நாளிரவு 1 மணிக்கே விமான சேவையானது தொடங்கியுள்ளது.
- 1 Dec 2024 1:43 AM IST
ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நள்ளிரவில் முழுமையாக கரையைக் கடந்துள்ளது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 90 க.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 1 Dec 2024 12:31 AM IST
ஃபெஞ்சல் புயல் 9 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது, இன்னும் சற்று நேரத்தில் முழுமையாக கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 1 Dec 2024 12:17 AM IST
சென்னையில் 553 இடங்களில் மழைநீர் தேங்கியது. இதில் 172 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டன. 381 இடங்களில் தேங்கி உள்ளது. 99 இடங்களில் விழுந்த மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டன. 6 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது
- 30 Nov 2024 11:56 PM IST
ஃபெஞ்சல் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது, நள்ளிரவிற்குள் முழுவதும் கரையைக் கடக்கும் என கூறப்படும் நிலையில் சென்னையில் மழை குறைந்துள்ளது.
- 30 Nov 2024 10:58 PM IST
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு அருகே 30 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இரவு 11.30 மணிக்குள் புயல் முழுவதுமாக கரையைக் கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
- 30 Nov 2024 10:44 PM IST
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு வானிலை மையம் நாளை காலை 8.30 மணி வரை அதி கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் , திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவையில் அதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 30 Nov 2024 9:20 PM IST
சென்னையில் பெய்து வரும் கனமழையால், மின்சாரம் தாக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு
- 30 Nov 2024 8:44 PM IST
சென்னையை அடுத்து வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று ஃபெஞ்சல் புயல் காரணமாக செயல்படவில்லை. இந்நிலையில், நாளையும் பராமரிப்பு பணி காரணமாக பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.