மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்
புயல் மழை காரணமாக சென்னையில் 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை விமான மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 90 கி.மீ- மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ- புதுச்சேரியில் இந்து 80 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
மாமல்லபுரம்- மரக்காணம் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நாளை நடைபெற இருந்த வங்கித் தேர்வுகளை ஒத்திவைத்தது IIB&F நிறுவனம். வங்கித் தேர்வு எந்தத் தேதியில் நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல் எதிரொலியால் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, மழை கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளும் தீவிரம்- உதயநிதி ஸ்டாலின்
செங்கல்பட்டு- தாம்பரம் இடையேயான மின்சார ரெயில் சேவை நிறுத்தம்
தாம்பரம் - கடற்கரை ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் காலை 5 மணி முதுல் 8.30 மணி வரை 45 மிமீ மழை பதிவு- வானிலை ஆய்வு மையம்
ஃபெஞ்சல் புயுல் காரணமாக புதுச்சேரி திரையரங்குகளில் இன்று மாலை மற்றும் இரவு காட்சிகள் ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மற்றும் புதுவைக்கு 100 கி.மீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ளது. 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த ஃபெஞ்சல் புயலின் வேகம் தற்போது 10 கி.மீ வேகமாக குறைந்துள்ளது.