தமிழ்நாடு செய்திகள்
null

"கள்" போராட்டம் நடத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை- அண்ணாமலை

Published On 2025-06-16 15:43 IST   |   Update On 2025-06-16 17:11:00 IST
  • சீமான் திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
  • திருமாவளவன் அண்ணன் பேச வேண்டிய இடத்தில் மீசையை முறுக்கி பேசுவேன் என்கிறார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற "கள்" விடுதலை மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தமிழனின் தேசிய பானம் "கள்". அதனை பனஞ்சாறு, மூலிகை சாறு என்றும் சொல்லலாம். ஒரு நாள் நானே பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்துவேன் என கூறியிருந்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில், சீமானின் 'கள்' இறக்கும் போராட்டம் குறித்த கேள்விக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்தார்.

அப்போது அவர்," 'கள்' போராட்டத்திற்கு பாஜகவின் முழுமையான ஆதரவு இருக்கிறது. கள் இறக்கும் தடையை மீறி போராட்டம் நடத்த எனக்கு உடன்பாடு இல்லை. தடையை நீக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். சட்டப்படி தடையை தளர்த்திவிட்டு களத்திற்கு வருவோம்" என்றார்.

மேலும், "திருமாவளவன் அண்ணன் பேச வேண்டிய இடத்தில் மீசையை முறுக்கி பேசுவேன் என்கிறார். எப்போது பேசுவார் என்று நாங்களும் காத்திருக்கிறோம்" என்றார்.

Tags:    

Similar News