தமிழ்நாடு செய்திகள்
ரெட் அலர்ட்: செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது
- சென்னை மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களிலேயே தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னையில் பள்ளிகளுக்கும் கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.