null
கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழைக்கு வாய்ப்பு.
- மாணவர்கள் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், நேற்று முதலே கனமழை பெய்து வருவதை அடுத்து மாணவர்கள் பாதுகாப்பு கருதி தூத்துக்குடி, விழுப்புரம், புதுச்சேரி, தஞ்சாவூர், திருநெல்வேலி, தென்காசி, திருச்சி மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல் திண்டுக்கல், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், விருதுநகர், கரூர், தேனி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சேலம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.