தமிழ்நாடு செய்திகள்

8 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Published On 2025-08-07 14:52 IST   |   Update On 2025-08-07 14:52:00 IST
  • தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன.
  • சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதன்காரணமாக, தமிழகத்தில் வடமாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 12-ந் தேதி (திங்கட்கிழமை) வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதில் குறிப்பாக இன்று கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை ஆகிய 8 மாவட்டங்களிலும், நாளை (8-ந் தேதி) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், சேலம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News