தமிழ்நாடு செய்திகள்
பிரதமரின் தாய் பற்றி அவதூறு- ஜி.கே.வாசன் கண்டனம்
- பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை பற்றி பேசினார்.
- எதிர்க்கட்சியினர் பிரதமர் மற்றும் அவரது தாயார் பற்றி அவதூறாக பேசியது முற்றிலும் தவறானது.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை, அனைத்து துறைகளில் வளர்ச்சி தேக்கம் ஆகியவற்றைப் பற்றி பேசினார்.
இந்நிலையில் எதிர்க்கட்சியினர் பிரதமர் மற்றும் அவரது தாயார் பற்றி அவதூறாக பேசியது முற்றிலும் தவறானது. இந்தப் பிரச்சனையில் எதிர்க்கட்சியினரின் அநாகரிகமான போக்கை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கண்டிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.