தமிழ்நாடு செய்திகள்

தொண்டர்கள் மன உளைச்சலில் உள்ளனர்: ராமதாஸ்-அன்புமணி மனம் விட்டு பேச வேண்டும்- ஜி.கே. மணி

Published On 2025-07-05 10:51 IST   |   Update On 2025-07-05 10:51:00 IST
  • இருவரும் மாறி மாறி பொறுப்புகளை நியமிப்பதால் எந்த தீர்வும் ஏற்படாது.
  • இருவரும் ஒன்று சேர்ந்தால் மற்ற கட்சிகளுக்கு பேச இடமில்லை.

திண்டிவனம்:

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. புதிய தலைமை நிலைய குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு தலைமை நிலைய குழு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொள்ள பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ம.க. வில் ஏற்பட்ட குழப்பதால் கட்சி பொறுப்பாளர்கள் முதல் தொண்டர்கள் வரை மனஉளைச்சலில் உள்ளோம். இது மாற வேண்டும். இருவரும் மாறி மாறி பேசினால் குழப்பம் தான் ஏற்படும். டாக்டர் ராமதாசும், அன்புமணியும் ஒரே இடத்தில் அமர்ந்து மனம் விட்டு பேசி தீர்வு காண வேண்டும்.

இருவரும் மாறி மாறி பொறுப்புகளை நியமிப்பதால் எந்த தீர்வும் ஏற்படாது. பா.ம.க. பழைய நிலைக்கு வீறுகொண்டு எழவேண்டும். இருவரும் ஒன்று சேர்ந்தால் மற்ற கட்சிகளுக்கு பேச இடமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News