தமிழ்நாடு செய்திகள்
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் - தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு அ.தி.மு.க. கடிதம்
- பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
- பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை விசாரிக்கக்கோரி தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு அ.தி.மு.க. கடிதம் எழுதி உள்ளது. அதில்,
கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
2022-2025 வரை நடந்த வன்கொடுமைகள் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.