தமிழ்நாடு செய்திகள்
அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்டவிரோதம்: தேர்தல் ஆணையத்திடம் டாக்டர் ராமதாஸ் பரபரப்பு புகார்
- நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் தலைவரின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- தலைவர் பதவிக் காலத்தை நீட்டித்தது கட்சி விதிகளுக்கு முரணானது.
பா.ம.க. பொதுக்குழுவை அன்புமணி ராமதாஸ் கூட்டியதற்கும், அதில் அவர் தலைவராக நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கும் எதிராக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.
கட்சியின் நிறுவனரான தனக்கு அழைப்பு விடுக்காமல் அன்புமணி பொதுக்குழுவை நடத்தியுள்ளார். அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்ட விரோதம். நிறுவனரின் ஒப்புதல் இல்லாமல் தலைவரின் பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக் காலத்தை நீட்டித்தது கட்சி விதிகளுக்கு முரணானது. அன்புமணி மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார்.