தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க தலைவர் ராமதாஸ் உடன் நீண்ட நேரமாக குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனை

Published On 2025-04-10 21:53 IST   |   Update On 2025-04-10 21:53:00 IST
  • பாமக தலைவராக இருந்த அன்புமணியை செயல்தலைவராக நியமிப்பதாக தெரிவித்தார்.
  • அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாக முதல் ஆளாக பா.ம.க. பொருளாளர் திலகபாமா குரல் கொடுத்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, இனி பா.ம.க. தலைவர் நான் தான் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

மேலும் பா.ம.க. தலைவர் பதவியை தானே எடுத்துக்கொள்வதாகவும், பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணியை செயல்தலைவராக நியமிப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, பா.ம.க. தலைவராக இருக்கும் அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. பா.ம.க. விதிகளின் அடிப்படையில் பொதுக்குழுவிற்கே தலைவரை நீக்கம் அதிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பா.ம.க.வில் உள்ள நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர் அன்புமணிக்கு ஆதரவாக உள்ளதாக கூறுகின்றனர்.

இதற்கிடையே, அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாக முதல் ஆளாக பா.ம.க. பொருளாளர் திலகபாமா குரல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக தலைவர் மற்றும் நிறுவனர் ராமதாஸ் உடன் அவரது மகள்கள் காந்திமதி, கவிதா உள்ளிட்டோர் 3 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நீண்ட நேரமாக காத்திருந்த பொருளாளர் திலகபாமாவை சந்திக்க மறுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News