தமிழ்நாடு செய்திகள்

டிச.10-ல் அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2025-11-23 11:12 IST   |   Update On 2025-11-23 11:12:00 IST
  • ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
  • அ.திமு.க. பொதுக்குழு மற்றம் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளதாக அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி, சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அ.திமு.க. பொதுக்குழு மற்றம் செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News