தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி பழனிசாமி அருமையான வெற்றிக் கூட்டணி அமைப்பார்: ராஜேந்திர பாலாஜி

Published On 2025-03-31 17:24 IST   |   Update On 2025-03-31 17:24:00 IST
  • 2-வது இடத்திற்குதான் போட்டி என மு.க. ஸ்டாலின் கூறியது கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக... அது உண்மையல்ல.
  • கூட்டணியின் முடிவுகளை எடப்பாடி பழனிசாமி ஒருவர்தான் எடுப்பார். அவர் அறிவிப்பார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பேட்டியளிக்கும்போது அவர் கூறியதாவது:-

* திருப்பதி ஏழுமலையான் கோவில் வாழ்க்கைக்கு நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய ஸ்தலம்.

* விஜய் திமுகவுக்கும்- தவெக-வுக்கும் இடையில்தான் போட்டி என்பதற்கு எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். அந்தந்த கட்சி தலைவர்கள் தொண்டர்களை ஊக்கப்படுத்த தங்களுடைய பேச்சுகளில் கவனம் செலுத்துவார்கள். போட்டி என்பது திமுக-வுக்கும் அதிமுகவுக்கும் இடையில்தான் என்பதை உலகம் அறியும், ஊர் அறியும். நாடு அறியும்.

* 2-வது இடத்திற்குதான் போட்டி என மு.க. ஸ்டாலின் கூறியது கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக... அது உண்மையல்ல.

* கூட்டணியை பொறுத்த வரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அருமையான வெற்றிக் கூட்டணி அமைப்பார்.

* கூட்டணியின் முடிவுகளை அவர் ஒருவர்தான் எடுப்பார். அவர் அறிவிப்பார்.

* ஒருநாள் திட்டத்தில் இருந்து 100 வேலை திட்டம் வரை அனைத்திலும் ஊழல் நடப்பதாக பொதுவாக தமிழகத்தின் மத்தியில், இளைஞர்கள் மத்தியில், சமூக ஆர்வலர்கள் மத்தியல் பேச ஆரம்பித்து விட்டார்கள். அதனால் திமுக-வுக்கு இனிமேல் வீழ்ச்சிதான்.

* அற்புதமான ஆட்சி கொடுத்த ஆட்சி அதிமுக என்ற நம்பிக்கை மக்களிடத்தில் வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அற்புதமான ஆட்சி அமையும். அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள். 2026ஆம் ஆண்டு தேர்தல் அதிமுக-வுக்கான தேர்தல்.

இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

Tags:    

Similar News