தேர்தல் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்த எடப்பாடி பழனிசாமி
- எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தொகுதிகள் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
- ஐந்தாம் கட்ட சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தொடர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
இதற்கிடையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்திருப்பதால், எடப்பாடி பழனிசாமி வரும் 26-ம் தேதி வரை தொடர் பிரசாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த 5-ம் கட்ட சுற்றுப்பயணத்தில் 17, 18-ம் தேதி களில் தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 28, 29-ம் தேதிகளில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதன்படி, வரும் 28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும், 29-ம் தேதி (திங்கட்கிழமை) பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தெரிவித்துள்ளது.