சவுதி அரேபியாவில் 42 இந்தியர்கள் பலி- அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்: எடப்பாடி பழனிசாமி
- உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- உயிரிழந்தோர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
சென்னை:
தெலுங்கானாவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனித பயணம் மேற்கொண்ட பக்தர்கள் பயணித்த பேருந்து மீது டீசல் லாரி மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, இந்த விபத்தில் இருந்து 24 வயதான வாலிபர் ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.
நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் தொடர்பாக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அ.தி.முக. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தெலங்கானா மாநிலத்தில் இருந்து மெக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டு, மதீனா நகருக்கு செல்லும் வழியில் பேருந்து விபத்தில் சிக்கி 42 இந்தியர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோர் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.