புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்து விட்டதா?- இ.பி.எஸ்.
- அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறது தி.மு.க.
- குவாரி உரிமையாளர்களை மிரட்டி ரூ.10 லட்சம் தர வேண்டும் என நிர்பந்தம் செய்கிறார்கள்.
கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. ஆட்சியில் ஏதாவது குறை சொல்ல முடியுமா?
* அ.தி.மு.க.தான் தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைமை என தெளிவாக அறிவிப்பு வந்தது.
* அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறது தி.மு.க.
* கோவையில் பல பாலங்களுக்கான திட்டங்களை கொண்டு வந்தது அ.தி.மு.க.தான்
* நிதியே ஒதுக்காமலேயே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும் எனக்கூறுகிறது காங்கிரஸ். ஆனால் தி.மு.க. கொடுக்க மறுக்கிறது.
* 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக பொய் கூறுகிறார்கள்.
* குவாரி உரிமையாளர்களை மிரட்டி ரூ.10 லட்சம் தர வேண்டும் என நிர்பந்தம் செய்கிறார்கள்.
* புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்து விட்டதா?
இவ்வாறு அவர் கூறினார்.