தமிழ்நாடு செய்திகள்

புயலால் சேதம் அடைந்த தடுப்பணைகள், நீர் தேக்கங்களை சீரமைக்க முதல்வர் உத்தரவு- துரைமுருகன் தகவல்

Published On 2024-12-09 12:18 IST   |   Update On 2024-12-09 12:18:00 IST
  • தென் பெண்ணை ஆற்று வெள்ளத்தால் சேதாரம் ஏற்பட்ட இடங்களில் செப்பனிடும் பணி நடக்கிறது.
  • 40 முதல் 50 பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மூலம் சேதாரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது.

சென்னை:

சட்டசபை கேள்வி நேரத்தின்போது பேசிய தி.மு.க. உறுப்பினர் மணிகண்டன், "தென்பெண்ணை ஆற்று உபரி நீர் மலட்டாற்றில் திறந்து விடப்பட்டு 13 கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. மலட்டாற்றின் கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து கூறியதாவது:-

தென் பெண்ணை ஆற்று வெள்ளத்தால் சேதாரம் ஏற்பட்ட இடங்களில் செப்பனிடும் பணி நடக்கிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாக ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

40 முதல் 50 பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மூலம் சேதாரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடக்கிறது.

மலட்டாற்றில் உடனடியாக கரைகளை பலப்படுத்த வேண்டிய தேவை இருந்தால் உடனடியாக பலப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News