தமிழ்நாடு செய்திகள்
வருகிற 7-ந்தேதி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
- கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.
- அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் - பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக 07.06.2025 அன்று காலை நடைபெறும்.
இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும் இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.