தமிழ்நாடு செய்திகள்

108 ஆம்புலன்ஸுகளுக்கு 4,635 அழைப்புகள்- வழக்கத்தை விட 61 சதவீதம் கூடுதல்

Published On 2025-10-21 07:37 IST   |   Update On 2025-10-21 07:37:00 IST
  • 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
  • 135 அழைப்புகள் தீக்காயங்களுக்காக வந்ததாக ஆம்புலன்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது.

சென்னை:

தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டியது. மழை குறுக்கிட்டாலும் பெரும்பாலான பகுதிகளில் பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடினர்.

இந்த நிலையில், நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 108 ஆம்புலன்ஸுகளுக்கு தமிழகம் முழுவதும் இருந்து 4,635 அழைப்புகள் வந்ததாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 61 சதவீதம் வந்த கூடுதல் அழைப்புகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர் என்றும் அதில் 135 அழைப்புகள் தீக்காயங்களுக்காக வந்ததாகவும் ஆம்புலன்ஸ் நிர்வாகம் கூறியுள்ளது. 

Tags:    

Similar News