தமிழ்நாடு செய்திகள்

டிட்வா புயல்: கடலூர், விழுப்புரத்திற்கு பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என கணிப்பு- அமைச்சர்

Published On 2025-11-29 10:55 IST   |   Update On 2025-11-29 10:55:00 IST
  • டிட்வா புயலால் இதுவரை பெரிய பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ கிடையாது.
  • புயல் எங்கு கரையை கடக்கும் என தற்போது வரை தெரியவில்லை.

சென்னை:

'டிட்வா' புயலானது சென்னையை நோக்கி நெருங்கிவருவதால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் காணொலி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டார்.

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனையில் ஈடுபட்ட பின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

* நாகை மாவட்டம் தோப்புத்துறையில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

* சென்னையை ஒட்டி புயல் செல்லும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் கடற்கரையோரம் யாரும் செல்ல வேண்டாம்.

* டிட்வா புயலால் இதுவரை பெரிய பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ கிடையாது.

* மீட்பு பணிகளுக்காக ஹெலிகாப்டர்களின் உதவியை நாடவும் அறிவுறுத்தி இருக்கிறோம்.

* காற்றோடு மழை பெய்யும் போது பாதிப்புகள் இருக்கக்கூடும்.

* படகு, பயிர்கள் சேதம் தொடர்பாக 30-ந்தேதிக்கு பிறகு கணக்கெடுத்து இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சரும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

* ஒரு கோடியே 24 லட்சம் பேருக்கு புயல் முன்னெச்சரிக்கை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

* கடலூர், விழுப்புரத்திற்கு பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

* புயல் எங்கு கரையை கடக்கும் என தற்போது வரை தெரியவில்லை என்றார்.

Tags:    

Similar News